காலாப்பட்டு மத்திய சிறையில் கைதி மர்டர் மணிகண்டனிடம் இருந்து மொபைல்போன் பறிமுதல்..
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மர்டர் மணிகண்டன் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்ததால், கடந்த டிசம்பர் மாதம் ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டார்.
உடல்நிலை பரிசோதனைக்காக கடந்த 2ம் தேதி மர்டர் மணிகண்டன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.நேற்று மாலை சிறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மர்டர் மணிகண்டனிடம் இருந்து ஒரு மொபைல்போனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், தன்னை ஏனாம் சிறைக்கு மாற்றிய சிறை நிர்வாகத்தை பழிவாங்கும் நோக்கில், சிறையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.மொபைல்போனை பறிமுதல் செய்த சிறை நிர்வாகம், காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.
No comments